தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து சிறப்பு புலனாய்வு குழுவை விசாரணைக்கு நியமித்த நிலையில் இதனை எதிர்த்து தமிழக வெற்றி கழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில் பல்வேறு சரமாரி கேள்விகளை முன் வைத்திருந்தது. இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கை தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இவரது தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு இந்த வழக்கின் விசாரணையை மேற்பார்வை செய்யும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.