தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக வெற்றி கழகம் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது இது தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நிலையில் நீதிபதி செந்தில்குமார் இந்த விவகாரத்தில் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அதாவது கரூரில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களா.? கரூர் நெரிசல் விவகாரத்தில் சேதங்களை கணக்கிட்டீர்களா. இரண்டு பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது வழக்கு பதிவு செய்ய என்ன தடை.? புகார் இல்லாவிட்டாலும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டாமா. நடிகர் விஜய் பயணித்த பேருந்து மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டதாக வீடியோக்கள் வெளிவருகிறது.

இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டதா. நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. கரூர் சம்பவத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு. Man made disaster நடந்துள்ளது. கரூர் விவகாரத்தில் அரசு அமைதியாக இருக்க முடியாது சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் தான். தவெக தலைவர் விஜயிடம் தலைமைத்துவ பண்பே இல்லை. பரப்புரை ஏற்பாட்டாளர்கள் மற்றும் தலைவர் என அனைவருமே சம்பவம் நடந்தவுடன் அவர்களை பின்தொடர்பவர்களையும் கைவிட்டு அங்கிருந்து மறைந்து விட்டனர் என்று கூறினார்.

மேலும் கரூர் சம்பவத்தில் ஐ.ஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் கரூர் மாவட்ட எஸ்பிஐ குழுவில் இணைத்து வழக்கு ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க கரூர் போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.