
தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெங்கல் புயலாக மாறி கரையை கடக்க இருப்பதால் தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் காலை முதல் மழை வெளுத்து வாங்குகிறது. மழை காரணமாக தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்த மாவட்டங்களுக்கு நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாவட்ட ஆட்சியர் நாளையும் இரு மாவட்டங்களுக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேலும் இன்று மழை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.