அதிமுக கட்சியில் தேர்தலுக்கு பிறகு உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் இரு அணிகளாக பிரிந்தது. இதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 4 எம்எல்ஏக்கள் வரை தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த நிலையில் பிற எம்எல்ஏக்களை கட்சியில் இணைக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக முயற்சி செய்தார். இதன் பயனாக எஸ் பி வேலுமணி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து இணைந்தனர். அதோடு சபாநாயகரிடம் கொடுக்கப்பட்ட கொறடா விவகாரம் தொடர்பான இருதரப்பு மனுக்களும் வாபஸ் செய்யப்பட்ட நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய வலியுறுத்தியதாக எஸ்பி வேலுமணி கூறினார்.
#WATCH | MLA பதவியை ராஜினாமா செய்யும் CVS? – ஆவேசமாக வெளியேறிய காட்சி#SunNews | #CVShanmugam | #ADMK pic.twitter.com/JssilIhVIe
— Sun News (@sunnewstamil) May 27, 2026
ஆனால் இந்த சந்திப்பின்போது சிவி சண்முகம் மட்டும் கலந்து கொள்ளவில்லை. இதனால் தற்போது அவரை சமாதானம் செய்ய அதிமுக மூத்தலைவர்கள் பலரும் அவரது வீட்டிற்கு சென்ற நிலையில் அவர் அங்கிருந்து கோபத்தோடு வெளியேறி சென்றுவிட்டார். இதன் காரணமாக சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சிவி சண்முகம் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
