அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) சார்பில், தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை, கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று வெளியிட்டார்.
அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசித்த பிறகு, வேட்பாளர் தேர்வில் அவர் கவனமாக ஈடுபட்டு, இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளார். முதற்கட்ட பட்டியலில், கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பழனிச்சாமி மீண்டும் எடப்பாடி தொகுதியில் களம் காண்கிறார். கழகத் துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. நத்தம் இரா. விசுவநாதன், B.Sc., M.L.A., அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தின் நத்தம் (131) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
கழகத் தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. S.P. வேலுமணி, M.A., M.Phil., M.L.A., அவர்கள் தொண்டாமுத்தூர் (119) தொகுதியில் வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பின்வரும் தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள்:
திரு. பி. தங்கமணி, B.A., M.L.A. (முன்னாள் அமைச்சர்): குமாரபாளையம் (97)
திரு. D. ஜெயக்குமார், B.Sc., B.L. (முன்னாள் அமைச்சர்): ராயபுரம் (17)
திரு. C.Ve. சண்முகம், B.A., B.L., M.P. (முன்னாள் அமைச்சர்): மைலம் (71)
திரு. செல்லூர் K. ராஜு, B.Sc., M.L.A. (முன்னாள் அமைச்சர்): மதுரை மேற்கு (194)
திரு. K.P. அன்பழகன், M.L.A. (முன்னாள் அமைச்சர்): பாலக்கோடு (57)
திரு. R. காமராஜ், M.A., M.L.A. (முன்னாள் அமைச்சர்): நன்னிலம் (169)
திரு. O.S. மணியன், M.L.A. (முன்னாள் அமைச்சர்): வேதாரண்யம் (165)
டாக்டர் C. விஜயபாஸ்கர், MBBS., M.L.A. (முன்னாள் அமைச்சர்): விராலிமலை (179)
திரு. கடம்பூர் C. ராஜு, D.T.Ed., M.L.A. (முன்னாள் அமைச்சர்): கோவில்பட்டி (218)
திரு. K.T. ராஜேந்திரபாலாஜி (முன்னாள் அமைச்சர்): சிவகாசி (205)
திரு. பா. பென்ஜமின், B.A. (முன்னாள் அமைச்சர்): மதுரவாயல் (7)
திரு. V.V. ராஜன் செல்லப்பா, M.A., B.L., M.L.A.: திருப்பரங்குன்றம் (195)
திரு. K.C. கருப்பணன், M.L.A. (முன்னாள் அமைச்சர்): பவானி (104)
திரு. K.C. வீரமணி, B.A. (முன்னாள் அமைச்சர்): ஜோலார்பேட்டை (49)
மேலும், திரு. R.B. உதயகுமார், B.Com., MSW., BL., M.L.A. (கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர், முன்னாள் அமைச்சர்) அவர்கள் திருமங்கலம் (196) தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திரு. அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, B.Sc., (Agri.) B.L., M.L.A. (கழக விவசாயப் பிரிவுச் செயலாளர், முன்னாள் அமைச்சர்) அவர்கள் கலசபாக்கம் (65) தொகுதியிலும், திரு. M.R. விஜயபாஸ்கர் (முன்னாள் அமைச்சர்) கரூர் (135) தொகுதியிலும், திரு. தாமரை S. ராஜேந்திரன் (அரசு முன்னாள் தலைமைத் கொறடா) அரியலூர் (149) தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
