உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நிலையில் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றுள்ளது. இதன் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 212 ரன்களும், தென்னாபிரிக்கா 138 ரன்களும் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. மொத்தமாக ஆஸ்திரேலிய அணி 282 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்ததாக களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் சேர்த்தது.

இன்று நான்காவது நாள் போட்டியின் போது தென்னாபிரிக்க அணியில் மார்க்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 136 ரன்கள் வரை எடுத்த நிலையில் ஹேசல்வுட் கேட்சில் அவுட் ஆனார். இறுதியில் தென்னாபிரிக்க அணி 83.4 ஓவர்களில் 5 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்ற முதல் முறையாக ஐசிசி சாம்பியன் ஆனது.

மேலும் ஐசிசி இறுதி போட்டிகளில் இதுவரை கேப்டனாக தோல்வியை தழுவாத ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதல் முறையாக தோல்வியை சந்தித்துள்ளார். தென்னாபிரிக்கா கேப்டன் பவுமா தலைமையில் முதல் முறையாக தென்னாப்பிரிக்கா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது தென்னாப்பிரிக்க ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.