
ஆசிய விளையாட்டில் ஆடவர் கபடியில் இந்தியாவுக்கு தங்க பதக்கம் கிடைத்துள்ளது. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் ஈரான இந்திய அணி வீழ்த்தி தங்க பதக்கத்தை தட்டி தூக்கி உள்ளது. 33 -29 என்ற புள்ளி கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.இந்தியாவுக்கு இது 28 வது தங்கப்பதக்கம் ஆகும். மொத்தம் 103 பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது. 28 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் பெற்றுள்ளது.
முன்னதாக ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா – ஈரான் அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியில் நடுவர்களின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு அணி வீரர்களும் மாறி மாறி நடுவர்களின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பான இறுதி கட்டத்தில் சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது..
போட்டி முழுவதும் வீரர்கள்/பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே நிறைய வாக்குவாதங்கள் நடந்தன, இந்திய வீரர்கள் எழுந்து நிற்க மறுத்துவிட்டனர். என்ன முடிவை எடுப்பது என தெரியாமல் நடுவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தற்போது தங்கத்தை தூக்கியுள்ளது இந்திய அணி. இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் கபடி போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளது.
GOLD medal for India
Men Kabaddi: India beat Iran in FINAL. #AGwithIAS #IndiaAtAsianGames #AsianGames2022 pic.twitter.com/L4JArKsBrP
— India_AllSports (@India_AllSports) October 7, 2023