இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்பது மிக முக்கியமானதாக இருப்பதால் சிறு தொகையாக இருந்தாலும் அதனை சரியான திட்டத்தில் முதலீடு செய்தால் முதுமை காலத்தில் நீங்கள் பயனடையும் முடியும். சிறுசேமிப்பு திட்டங்கள் மட்டுமல்லாமல் பலரும் தற்போது ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் அதிக அளவு முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். இதில் வங்கிகளை பொறுத்து வட்டி விகிதங்கள் மாறுபடலாம். ஒருவேளை நீங்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் அல்லது இனிமேல் முதலீடு செய்ய நினைத்தால் எந்தெந்த வங்கியில் எவ்வளவு வட்டி விகிதம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இவற்றில் உங்களுக்கு ஏழு சதவீதம் வரை வட்டி லாபம் கிடைக்கும்.

ஐசிஐசிஐ வங்கி – 7 சதவீத வட்டி
HDFC வங்கி – 7 சதவீத வட்டி
ஆக்சிஸ் வங்கி – 7 சதவீத வட்டி
கனரா வங்கி – 6.70 சதவீத வட்டி
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா – 6.70 சதவீத வட்டி
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா – 6.50 சதவீத வட்டி
பஞ்சாப் நேஷனல் வங்கி – 6.50 சதவீத வட்டி
பேங்க் ஆஃப் பரோடா – 6.50 சதவீத வட்டி
இந்தியன் வங்கி – 6.50 சதவீத வட்டி
பேங்க் ஆஃப் இந்தியா – 6 சதவீத வட்டி