ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கத்தை வென்றது இந்திய ஆடவர் அணி. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது கேப்டன் பதவியை தங்கப் பதக்கத்துடன் தொடங்குகிறார்..

2023 ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் பிரிவில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே இன்று தங்கப் பதக்கத்திற்கான கிரிக்கெட் போட்டி ஜெஜியாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பிங்ஃபெங் கிரிக்கெட் மைதானநடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க வீரர்களான அக்பரி (5), முகமது ஷாஜாத் (4),  நூர் அலி (1) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

மேலும் அஃப்சர் ஜசாய் (15) கரீம் ஜனத் (1) ஆகியோரும் நீடிக்கவில்லை. ஆப்கானிஸ்தான் 11 ஓவரில் 52/5 என இக்கட்டான நிலையில் இருந்தது. பின் ஷாஹிதுல்லா கமால் மற்றும்  குல்பாடின் நைப் ஜோடி சேர்ந்து பொறுமையாக ஆடினர். 18.2 ஓவரில் ஆப்கானிஸ்தான் 112/5 என இருந்தபோது மழை குறுக்கிட போட்டிநிறுத்தப்பட்டது.  இதனால் மழையால் போட்டி நிறுத்தப்பட்டதால் இந்திய அணி தங்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இது 27வது தங்கமாகும்.

இந்தியா:

ருதுராஜ் கெய்க்வாட் (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (வி.கீ.), சிவம் துபே, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், சாய் கிஷோர், அர்ஷ்தீப் சிங்.

ஆப்கானிஸ்தான் :

ஜுபைத் அக்பரி, முகமது ஷாஜாத் (வி.கீ), நூர் அலி சத்ரான், ஷாஹிதுல்லா கமால், குல்பாடின் நைப் (கே), ஷரபுதீன் அஷ்ரஃப், அஃப்சர் ஜசாய், கரீம் ஜனத், கைஸ் அகமது, ஃபரீத் அகமது மாலிக், ஜாஹிர் கான்