
தமிழ்நாட்டு பாஜகவில் இருந்து அடுத்தடுத்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். முன்னாள் எம்எல்ஏ ப.இளவழகன் மீண்டும் இபிஎஸ் முன்னிலையில் இணைந்துள்ளார். அதனைப் போலவே நேற்று இரவு பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும் தொழிலதிபருமான KPD இளஞ்செழியனும் தனது தொண்டர்களுடன் அதிமுகவில் இணைந்தார். இருவருக்கும் அதிமுகவில் முக்கிய பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.