தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். நேற்று இரவில் இருந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.