தயிர் பாக்கெட்டில் இந்தியில் தஹி என்று குறிப்பிட வேண்டும் என்று உத்தரவை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தி பெயரை பயன்படுத்த வேண்டும் என மத்திய தரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு நேற்று உத்தரவிட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.