ஆசிய விளையாட்டில் இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. இன்று நடைபெற்ற வில்வித்தை கலப்பு பிரிவு போட்டியில், இந்தியாவின் ஜோதி-ஓஜஸ் ஜோடி தங்கம் வென்றனர். இதன் மூலம், ஆசிய வரலாற்றில் இந்தியா அதிகபட்சமாக (2018) 70 பதக்கங்கள் வென்ற சாதனையை முறியடித்து, புதிய சாதனையை படைத்துள்ளது. தற்போது 71 பதக்கங்களுடன் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. இதனால் இந்தியா புதிய சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது