
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் வகையில் இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமை இயக்குனரான அப்துல் ரவூப் அஸார் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர் 1999-ம் ஆண்டு கந்தகார் விமான கடத்தலை திட்டமிட்டு நடத்திய முக்கிய மாஸ்டர்மைண்ட் ஆவார். அந்த கடத்தல் வழியாக அல்-கைதா பயங்கரவாதி ஓமர் சயீத் ஷேக் விடுவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த ஓமர் சயீத் தான், பின்னர் அமெரிக்க பத்திரிகையாளர் டேனியல் பெர்லை கடத்தி 2002-ல் கொலை செய்தார்.
டேனியல் பெர்ல், பாகிஸ்தானில் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் குறித்து பத்திரிகை ஆய்வுக்காக வந்தபோது, கராச்சியில் கடத்தப்பட்டார். பின்னர், “அமெரிக்கா கைது செய்த பாகிஸ்தானிகளை விடுவிக்க வேண்டும்” எனும் கோரிக்கையுடன் நாட்டு சுதந்திர இயக்கம் என்ற பெயரில் செயல்பட்ட குழு அவரை வன்முறையாக தலையை துண்டித்து கொன்றது.
இந்த கொலையின் பின்னணியில் ரவூப் அஸாரின் சர்வதேச பயங்கரவாத தொடர்புகள் இருந்ததை இந்திய பாதுகாப்பு அமைப்புகள் அப்போது கண்டறிந்திருந்தன. இப்போது அவர் இந்திய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பது, டேனியல் பெர்லின் குடும்பத்திற்கும் பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கும் ஒரு வரலாற்றுச் நீதி எனக் கருதப்படுகிறது.