ஆபரண தங்கத்தின் விலை நேற்று 200 ரூபாய், இன்று 800 ரூபாய் என இரண்டு நாளில் ஆயிரம் ரூபாய் உயர்ந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து 47 ஆயிரத்து 520 ரூபாய்க்கும் , கிராமுக்கு நூறு ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 940 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதனைப் போலவே வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து 77 ரூபாய்க்கும், கிலோ வெள்ளி 800 ரூபாய் உயர்ந்து 77 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.