இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனால் முக்கிய ஆவணங்களுடன் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. தற்போது ஆதாருடன் வாக்காளர் அட்டை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்பு வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 2024 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதாருடன் வாக்காளர் அட்டையை இன்னும் பெரும்பாலான மக்கள் இணைக்கவில்லை. இதனால் கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.