அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் நேற்று டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தனர். இந்த சந்திப்புக்குப் பிறகு உள்துறை மந்திரி அமித்ஷா  அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் அமையும் என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தி ருந்தார். எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி தொடர்பாக 6 மாதத்திற்கு பிறகு பதில் சொல்கிறேன் என்று கூறிய நிலையில் அமித்ஷாவின் x பதிவு கூட்டணியை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் அதிமுக பாஜக கூட்டணி தொடர்பாக தான் அமித்ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அதனை எடப்பாடி பழனிச்சாமி மறுத்துவிட்டார்.

அதாவது தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால் பாஜகவுடன் கூட்டணி நிலைப்பாடு பற்றி தற்போது கூற முடியாது என்றார். அதன் பிறகு தொடர்ந்து பேசிய அவர், இருமொழி கல்வி கொள்கை விவகாரம், தொகுதி மறு சீரமைப்பு, டாஸ்மாக் முறைகேடு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்டவைகள் தொடர்பாகவும் தமிழக மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் அமித்ஷாவை நேரில் சந்தித்து முறையிட்டதாக கூறினார். மேலும் அமித்ஷா கூட்டணியை உறுதிப்படுத்தியது போல் தேசிய ஜனநாயக கூட்டணி அமையும் என்று கூறிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதனை மறுத்துள்ளார்.