தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 130 வரையிலும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 85 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் பசுமை பண்ணை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளியை போல ரேஷன் கடைகளில் வெங்காயத்தை விற்பனை செய்வதற்கும் அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.