தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு என்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற இடத்தில் நடைபெறுகிறது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் புதிய அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் கட்சிக்கொடியினை அறிமுகப்படுத்தினார். அவருடைய கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்த கட்சியாக பதிவு செய்துள்ளது. அதன் பிறகு இன்று நடைபெறும் முதல் மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

காலை முதலே தொண்டர்கள் வர ஆரம்பித்த நிலையில் நடிகர் விஜய்யும் நேற்று இரவே மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்றுவிட்டார். பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ச்சிகள் தொடங்கிய நிலையில் ‌ பறை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அதன் தலைவர் விஜய் ஏற்றி வைத்துள்ளார். 100 அடிக்கும் மேல் உயரம் கொண்ட இந்த கொடி கம்பம் முழுக்க முழுக்க மின்மோட்டார் மூலம் கோடி ஏற்றும் நிகழ்வாகும் விஜய் அவர்கள் பச்சை நிற பொத்தான் ஒன்றை அமைக்க கொடி தற்போது கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டு வருகிறது