இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியக் கடற்படை தனது மிகவும் மேம்பட்ட P-8I நீர்மூழ்கிக் கப்பலை வேட்டையாடும்  விமானத்தை அரபிக்கடலில் பயணிக்க வைத்துள்ளது. நாட்டின் கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் மற்ற கடலோர அச்சுறுத்தல்களால் நிலவும் பதற்ற சூழ்நிலையை எதிர்கொள்வதற்காக, மிக துல்லியமாகச் செயல்படும் P-8I விமானம் கடற்படை இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அரபிக்கடல் பகுதிகளில் தீவிர ராடார் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளில் இது ஈடுபட்டுள்ளது.

அதிகாரிகள் தெரிவித்ததாவது, “நாட்டின் பாதுகாப்பிற்காக எவ்வித அச்சுறுத்தலும் சகிக்க முடியாது. நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு எதிரான முறையான நடவடிக்கைகளுடன் இந்தியக் கடற்படை தயாராக உள்ளது” என தெரிவித்தனர். P-8I விமானத்தின் மூலம் இந்தியா தன் கடல் எல்லைகளை முழுமையாக கண்காணிக்க முடியும் எனவும் அவர்கள் கூறினர்.