தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் தோல்வி மற்றும் அதன் தொடர்ச்சியாக அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பிரச்னைகள், குழப்பங்கள் காரணமாக தஞ்சையைச் சேர்ந்த மகேந்திரன் என்ற தீவிர தொண்டர் மன வேதனையடைந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

தான் இறந்த பிறகாவது கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட்டு அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என அவர் வீடியோ கூட வெளியிட்டு இருந்தார். இது அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு உயிரிழந்த மகேந்திரனின் குழந்தையின் படிப்பு செலவுகளை அதிமுகவை ஏற்கும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள நிலையில் குடும்ப நிதியாக ரூ.55 லட்சம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் மகேந்திரன் மரணத்திற்கு அதிமுகவினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.