
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சரும் ஆரணி எம்எல்ஏவும் ஆன சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இவருடைய மகன்கள் ஆன விஜயகுமார் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது. மேலும் சென்னையில் உள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன் மற்றும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோரது வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.