எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் பிரபல நடிகை கௌதமி. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் கௌதமி. பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய நிலையில், தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார் நடிகை கௌதமி.