இந்த மாத இறுதிக்குள் உத்தேச வேட்பாளர் பட்டியலை தயார் செய்யும்படி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அனைத்துக் கட்சிகளும் பணிகளை தொடங்கிவிட்டன. இந்நிலையில் அண்ணாமலைக்கு கடிதம் எழுதியிருக்கும் பாஜக தலைமை, உடனடியாக தொகுதிக்கு 3 என உத்தேச வேட்பாளர் பட்டியலை தயார் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.