பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசனை பிரதமர் மோடி கண்டித்துள்ளார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றிய பிரதமர் மோடிக்கு பாஜக அலுவகத்தில் இன்று மகளிர் அணி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அப்போது, அங்கிருந்த வானதி சீனிவாசன், பிரதமர் மோடி காலில் விழுந்துள்ளார். உடனே, பிரதமர் மோடி காலில் எல்லாம் விழக்கூடாது என அவரிடம் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளார்.