தமிழகத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் சட்டவிரோதமான முறையில் பணி நியமனம் செய்யப்பட்ட 236 ஊழியர்களை பணி நீக்கம் செய்து ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோன்று மோசடிக்கு துணையாக இருந்த 26 அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் 8 மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்களில் முறைகேடாக பணி பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.