தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக எம்எல்ஏக்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றார். இந்த கூட்டத்தில் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மேலும் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகள் மற்றும் கோரிக்கைகளை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசித்து வருகிறார். இதனால் சட்டமன்றத்தில் மிகப்பெரிய சம்பவம் காத்திருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருடத்திற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற நிலையில் முதல்வர் பேசிக் கொண்டிருக்கும்போது ஆளுநர் அங்கிருந்து வெளியேறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் நடத்தும் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.