மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில் இதுவரை பணிகள் எதுவும் தொடங்கவில்லை. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு மொத்தம் 1977.8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலையில் 12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2026-ம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நிறைவடையும் என ஆர்டிஐ கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.