கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய முடியவில்லை. அதனைத் தொடர்ந்து அமைச்சரை ரிமாண்ட் செய்ய ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நீதிபதி நேரில் வந்தார். அமலாக்கத் துறை அமைச்சரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்கவுள்ளது. அரசு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிக்க உள்ளனர்.