சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு. கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளையும் கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மழை எதிரொலியாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், கனமழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளதால், நாளையும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.