தமிழகத்தில் SETC பேருந்துகள் நீண்ட தூரத்திற்கு செல்வதால் பயணிகள் உணவு மற்றும் இயற்கை உபாதைகளுக்காக குறிப்பிட்ட இடைவெளியில் நிறுத்தப்படும். அங்கு திறந்தவெளி டெண்டர் மூலமாக தேர்வு செய்யப்பட்ட உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் உணவுக்காக நிறுத்தப்படும் இடங்களில் தரமான உணவுகள் இருப்பதில்லை, முறையான கழிப்பிட வசதிகளும் இருப்பதில்லை பராமரிப்பு வசதி இல்லை என்று பயணிகள் இடமிருந்து புகார்கள் வருகிறது.

அதன் படி போக்குவரத்து கழகத்தில் உள்ள அதிகாரிகள் தங்களுடைய கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், feefback லிங்க் அறிமுகம் செய்யப்பட்டு டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளின் கைபேசிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி பயணிகள் உணவகங்களில் உள்ள நிறை மற்றும் குறைகளை தெரிவிக்கலாம். இதன் மூலமாக தரப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.