திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றதை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வாக்குப்பதிவை தவிர மற்ற தேர்தல் நடைமுறைகள் முடிந்த நிலையில் தாமதமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், மனுதாரர் பாதிக்கப்பட்டிருந்தால் தேர்தல் முடிந்த பின் தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம் எனவும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. முழுமையாக பூர்த்தி செய்யப்படாத தகவல்களை மறைத்த வேட்பு மனுவை ஏற்றதை மறுபரிசீலனை செய்யவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.