சன் ரைசஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்துவரும் பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வெறும் 39 பந்துகளில் 9 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் விளாசி சதம் அடித்தார். 20 பந்துகளில் அரை சதம் அடித்த ஹெட் மேலும் 19 பந்துகளில் 100* ரன்களை எட்டினார்.

மேலும் 41 பந்துகளில் 102 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி 11.4 ஓவரில் 156/1 ரன்களை எட்டியது. தற்போது 16.2 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களை குவித்துள்ளது.