இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ஏற்கனவே சில மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது தெலுங்கானா மாநிலத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.

தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் இன்று முதல் வருகிற 30-ஆம் தேதி வரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பு கல்வி தகுதி, வருமானம் உள்ளீட்டு 56 கேள்விகள் மூலம் திரட்டப்பட இருக்கிறது. மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணியில் மொத்தம் 48 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட இருக்கிறார்கள். ஏற்கனவே தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கட்சிகள் வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.