துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி மற்றும் 7-ம் தேதி தொடர்ந்து 5 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை தொடர்ந்து மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் பிறகு நிலநடுக்கத்தால் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது 11,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும் என்று கூறப்படுவதால் பெரும் பதற்றம் நீடிக்கிறது.