திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மலையடிவாரத்தில் நேற்று ராட்சச பாறை உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்டதில் 3 வீடுகள் மண்ணில் புதையுண்டது. இந்த வீடுகளில் கிட்டத்தட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 7 பேர் வரை சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் காலை முதல் மீட்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வீடுகளில் இருந்த 7 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. இந்நிலையில் அந்தப் பாறை சரிந்து விழுந்த இடத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் மற்றொரு ராட்சச பாறை சரிந்து விழுந்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் தேசிய பேரிடர் மீட்பு பணியினர் பாறை விழுந்த இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் இடிபாடுகளில் இயக்கியவர்களை மீட்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.