பெஞ்சல் புயல் கரையை கடந்து காற்றழுத்த ஃதாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இருப்பினும் இதன் தாக்கம் குறையவில்லை. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது பாறை ஒன்று கனமழையின் காரணமாக உருண்டு சரிந்து விழுந்தது.
திருவண்ணாமலை மலை அடிவாரத்தின் கீழ் உள்ள வீடுகளின் மீது பாறை உருண்டு விழுந்தது. அந்த வீட்டில் 7 பேர் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்ட எஸ்பி சுதாகர் ஆகியோர் சென்றுள்ளனர். மேலும் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் வீட்டிலிருந்தவர்களின் கதி என்னவென்று தெரியவரவில்லை.