வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து அமைச்சர் பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு பெரியசாமி அமைச்சராக பதவி வகித்த போது வீட்டு வசதி வாரிய வீடு ஒன்றை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக பணியாற்றிய கணேசனுக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம் பெரியசாமியை விடுவித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்தது செல்லாது எனதீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் மறு விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். வரும் மார்ச் 28ஆம் தேதிக்குள் ஐ.பெரியசாமி நேரில் ஆஜராகி, ரூ.1 லட்சம் பிணைத் தொகையை செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.