தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல கட்சியிலிருந்தும் முக்கிய நிர்வாகிகள் பலரும் விலகி அதிமுகவில் ஐக்கியமாகி வருகிறார்கள். சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் பதவி ஏற்று கொண்ட நிலையில் பலரும் அதிமுகவில் இணைந்து வருகிறார்கள்.

இந்நிலையில் திமுகவில் இருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன் இன்று மாலை 6 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைகிறார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. 40 ஆண்டு காலம் திமுகவில் பயணித்த சுப்புலட்சுமி ஜெகதீசன் மத்திய இணை அமைச்சர், திமுக துணை பொதுச்செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்தவர். சமீபத்தில் திமுகவில் இருந்து விலகிய இவர் இன்று அதிமுகவில் இணைய உள்ளார்.