தமிழகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் சேவைகளை எளிதாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக பதிவுத்துறையில் அவ்வபோது பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது சொத்து பரிமாற்றத்தில் ஆள் மாறாட்டத்தை தடுக்க விற்பவரின் கைரேகையை முந்தைய பதிவுடன் ஒப்பிட்டு பார்க்கும் புதிய நடைமுறையை பதிவுத்துறை அமல்படுத்தியுள்ளது.

அதன்படி ஒரு சொத்து பத்திரம் பதிவுக்கு வரும்போது விற்பவரின் கைரேகை அதன் முந்தைய பதிவின்போது பெறப்பட்டதுடன் ஒத்துப் போனால் மட்டுமே புதிய பதிவு மேற்கொள்ளப்படும். இதில் வேறுபாடு ஏதாவது இருந்தால் தற்போது தாக்கல் செய்யப்படும் பத்திரம் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.