தமிழகத்தில் இன்று 15 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 10 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக சந்திரகலா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன் பிறகு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக அருணாவும், நீலகிரி மாவட்ட ஆட்சியராக லட்சுமி பவ்யாவும், தஞ்சை மாவட்ட ஆட்சியராக பிரியங்காவும், நாகை மாவட்ட ஆட்சியராக ஆகாஷூம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று அரியலூர் மாவட்ட ஆட்சியராக ரத்தினசாமியும், கடலூர் மாவட்ட ஆட்சியராக சிபி ஆதித்யா செந்தில்குமாரும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக அழகு மீனாவும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக கிரேஸ் லால் ரிண்டிகி பச்சுவாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சிம்ரன்ஜித் சிங் காலோன் நியமிக்கப்பட்டுள்ளார்.