ஆளுநர் விவகாரம் குறித்து ஜனாதிபதியை சந்திக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்றத்தில் நேற்று cm ஸ்டாலின் உரையாற்றும்போது ஆளுநர் ரவி பாதியில் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநருக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், அமைச்சர் ரகுபதி, டி.ஆர்.பாலு நாளை ஜனாதிபதியை சந்தித்து ஆளுநர் பேரவை மரபை மீறியது பற்றி புகாரளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.