கோடை வெயில் தாக்கம் குறையாததால், மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தேதியை தமிழக அரசு தள்ளி வைத்து அறிவித்தது. அதன் ஒருபகுதியாக தற்போது CBSE பள்ளிகளும் திறப்பு தேதியை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளது. 6-12ம் வகுப்பு வரை ஜூன் 12ம் தேதியும் 1-5ம் வகுப்பு வரை ஜூன் 14ம் தேதியும் பள்ளிகளை திறக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.