ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கு சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறுதான் முக்கிய காரணம் என கண்டறியப்பட்டதை அடுத்து ரயில்வே துறை முக்கிய முடிவு எடுத்துள்ளது. அனைத்து மண்டல மேலாளர்களும் ரிலே அறைகள் மற்றும் சிக்னல் அமைப்பில் உள்ள உபகரணங்களுக்கு இரட்டை பூட்டு ஏற்பாடுகளை செய்யுமாறும், ரயில் இயக்கத்தில் ஏற்படும் கோளாறுகள் குறித்து தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரிலே அறையின் கதவு திறப்பு/மூடுதலுக்கான தரவு பதிவும் சரிபார்க்கப்பட பரிந்துரைக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை கோரமண்டல், பெங்களூரு-ஹவுரா, சரக்கு ரயில் என 3 ரயில்கள் மோதிய விபத்தில் 280 பேர் வரை உயிரிழந்தனர்.