பிரபல தனியார் பால் நிறுவனம் ஆரோக்கியா. இந்த நிறுவனம் இன்று முதல் பால் மற்றும் தயிர் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதன்படி நிறை கொழுப்பு பால் 500 மில்லி 36 ரூபாயிலிருந்து 37 ரூபாயாகவும், ஒரு லிட்டர் பாலின் விலை 65 ரூபாயிலிருந்து 67 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
இதேபோன்று நிலைப்படுத்தப்பட்ட 500 மில்லி பாலின் விலை 31 ரூபாயிலிருந்து 32 ரூபாயாகவும், ஒரு லிட்டர் பாலின் விலை 58 ரூபாயிலிருந்து 60 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. மேலும் தயிர் விலை 500 கிராம் 37 ரூபாயிலிருந்து 37 ரூபாயாகவும், ஒரு கிலோ தயிரின் விலை 68 ரூபாய் ஆகவும் அதிகரித்துள்ளது.