தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாளொன்றுக்கு ஊதியம் தற்போது 290 ரூபாயாக உள்ள நிலையில் ஏப்ரல் 1 முதல் 319 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் இதற்காக 1229 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊரக வேலை உறுதி திட்ட ஊதியம் உயர்த்தப்படும் என மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.