தமிழகத்தில் பெஞ்சல் புயல் கரையை கடந்த பின்னரும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று 10 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தற்போது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் அந்தப் பகுதியில் மழை பெய்து வருவதால் தற்போது மாவட்ட ஆட்சியர் விடுமுறை கொடுத்து உத்தரவிட்டார்.

இதேபோன்று செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருப்போரூர், திருக்கழுக்குன்றம், செய்யூர், மதுராந்தகம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 5 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும்  நீலகிரி வட்டத்தில் உள்ள உதகை, கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய வட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.