ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக தமிழ் மாநில காங்., தலைவர் வாசனை, அதிமுக மூத்த நிர்வாகிகள் குழு இன்னும் சற்று நேரத்தில் சந்திக்கவுள்ளதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. OPS- EPS மோதலால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் நிலையில் உள்ளது. இதனால் இடைத்தேர்தலில் அதிமுகவால் போட்டியிட முடியாத சூழல் உள்ளதால், த.மா.கா. போட்டியிட வாய்ப்பு வழங்குவது குறித்து இந்த சந்திப்பு நடைபெறுவதாக கூறப்படுகிறது.