தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதன் பிறகு வந்த திரைப்படங்கள் பெரிய அளவில் வரவேற்பை ஏற்படுத்தவில்லை. இவர் தன்னுடைய மனைவி ஆர்த்தியை சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்த நிலையில் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய பெயரை மாற்றிவிட்டதாக அறிவித்துள்ளார்.

அதன்படி தன்னை இனி ரவி அல்லது மோகன் என அழைக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தன்னுடைய ரசிகர் மன்றத்தின் பெயரையும் மோகன் என மாற்றிவிட்டதாகவும் இனி இந்த புது பெயருடன் தன்னுடைய வாழ்க்கையை முன்னோக்கி எடுத்து செல்ல விரும்புவதாகவும் கூறியுள்ளார். சமீப காலமாக ஜெயம் ரவியின் படங்கள் வெற்றி பெறாத நிலையில் தற்போது அவர் தன் பெயரை மாற்றியுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.