2023 ஆம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி ஆளுநர் ஆர். என்.ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநர் தமிழக அரசு எழுதிக் கொடுத்த உரையில் பல வார்த்தைகளை நீக்கி பேசியது மட்டுமல்லாமல் அவரே கூடுதல் வார்த்தைகளையும் இணைத்து பேசினார்.

இதனால் பெரும் சர்ச்சைகள் எழுந்தன. சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆளுநர் மரபு மீறி நடந்தது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் கொடுத்து தமிழ்நாடு பிரதிநிதிகள் முறையிட்டனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் அளித்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால் விரைவில் ஆளுநர் திரும்ப பெறப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.